லைஃப்ஸ்டைல்

தண்ணீரை குடிக்கும் விதம் குணமாகும் பிரச்சனைகள் நீங்கள் பாருங்கள்

தண்ணீரை குடிக்கும் விதம்…. குணமாகும் பிரச்சனைகள்….

° சதகுப்பையை கொதிக்கும் நீரில் ஊறவைத்து மறுநாள் குடித்தால் வயிற்று வலி குறையும். செரிமானம் சீராகும்.

° செரிமானத்தை சீராக்க, ரத்தம் உரைத்தலை குறைக்க, இதயம் பலப்பட ; மருதம் பட்டையை வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடிக்க வேண்டும்.

° வில்வ நீர், துளசி நீர் இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடையது.கொதிக்கும் நீரில் புதினா இலைகளை போட்டு வைத்திருந்து, அதை வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.கிருமிகள் வராது.

° சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை நீக்க, சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து 60 மி.லி தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

° போதை பொருட்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த, பெருஞ்சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு வைக்க வேண்டும். மறுநாள் முழுவதும் அந்த நீரையே பருக வேண்டும்.

° குழந்தைகளுக்கு செரிமான கோளாறு நீங்க, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ஓமம் ஊற வைத்த நீரை குடுக்க வேண்டும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *